தமிழ் சினிமாவில் புரியாத புதிர் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல் ஆகிய இருவரையும் மாறி மாறி இயக்கி 90 களில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்தார்.