வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி?

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக விவாதங்கள் நடந்து தற்போதுதான் சர்ச்சைகள் அடங்கியுள்ளன.  இந்நிலையில் ஜெயம் ரவி தற்காலிகமாக தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள பிரதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு நேர்காணலில் பேசிய அவர் “மக்கள் எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார்கள். என்னிடம் பணம் இல்லை என்றால் நான் வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லை அவ்வளவுதான் என்று சென்றுவிடுவேன். கைகால் இருக்கு, திறமை இருக்கு. மக்கள் கொடுத்த அன்புக்கு முன்னால் எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அது ஈடாகாது” எனக் கூறியுள்ளார்.

அதே போல தன்னுடைய அடுத்தடுத்த படங்களைப் பற்றி பேசும்போது “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. இயக்குனர்களிடம் சென்று நாம் ஒரு படம் பண்ணலாம் என சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது வெற்றிமாறன் சாரிடம் நானாகவே சென்று ஒரு படம் பண்ணலாம் என சொல்லியுள்ளேன். அவர் தன்னுடைய கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு  கண்டிப்பாக பண்ணலாம் எனக் கூறியிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்