விவசாயியாக மாறிய ‘ஜெயம்’ ரவி: ”பூமி” ஃபர்ஸ்ட் லுக்

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (17:43 IST)
ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து வரும் பூமி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்ஹம் உள்ளிட்ட பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லீ இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்