மைனாவிற்கு விரைவில் இரண்டாம் திருமணம் - நிச்சயதார்த்தம் முடிந்தது!

வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:00 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார். 
இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். 
 
இதற்கிடையில் கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார் . குடும்ப வாழ்க்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்து வைத்தது இதனால் பிரச்சனைகளும் வலுத்தது. இதனால் அவரது கணவர் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நந்தினி அந்த நேரத்தில் ஒரு ஷோ’வில் லைவாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அறிந்தும் எந்தவிதமான ரியாக்சனும் காட்டவில்லை. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பிஸியாகிவிட்டார். 
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நந்தினியுடன்  நடித்து வரும் நடன இயக்குனருடன் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து பரபரப்பாக பேசப்பட்டது. . மேலும், மைனாவே பேட்டி ஒன்றில் தான் ஒரு சீரியல் நடிகரை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மைனாவுக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்தது கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.இதை அறிந்த அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. எது எப்படியோ இனிமேலாவது மைனாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கட்டும்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

We got engaged @yogeshwaram_official ❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்