பெண்ககள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். உடன் ஜாக்கி ஷரோப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆக வெற்றிநடை போடும் பிகில் படத்தின் பாடல் ஒன்றை படக்குழு யுடியூபில் வெளியிட்டுள்ளார். "பிகில் பிகில் பிகிலுமா" என துவங்கும் இப்பாடலுக்கு நடிகர் விஜய் பெண்களுடன் சேர்ந்து செம்ம ரகளையான ஆட்டம் போடுகிறார். விஜய்க்கு போட்டியாக நயன்தாராவும் செம்மையாக குத்தாட்டதாம் போட்டுள்ளார்.