வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கோரி பிரபல நடிகை மனு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:11 IST)
வெளிநாடு செல்ல அனுமதி கோரி பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்துள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது 
 
இந்த நிலையில் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் இடம் விசாரணை செய்துவரும் நிலையில் தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்
 
இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்