ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்- சுகேஷ் சந்திரசேகர்

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:14 IST)
பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  கைதாகிப்திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர்.

இவர்  இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில்  அவரை போலீஸார் ஆஜர்படுத்தினார்.

இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:ள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும், அக்கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு முன்னதாக  ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.60 கோடி கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி துணை நிலை ஆளுனருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்