அட்லி படத்தில் வில்லனாக நடிக்க உள்ள ஜெய்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (15:43 IST)
நடிகர் ஜெய் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

நடிகர் ஜெய் ஒரு காலத்தில் நம்பிக்கை அளிக்கும் இளம் கதாநாயக நடிகராக உருவாகி வந்தார். ஆனால் இடையில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் இப்போது ஒரு சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் வில்லனாக நடிக்கவும் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தை அவரின் உதவியாளர் இயக்க உள்ளார். அந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளாராம். மற்ற நடிக நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்