ரஜினியை முந்தினாரா விஜய் ஆண்டனி? ஆச்சரிய புள்ளிவிபரம்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (18:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் நடிகராகவும் வசூலில் நம்பர் ஒன் நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இருப்பினும் அவ்வப்போது மட்டும் சில திரைப்படங்கள் ரஜினியின் திரைப்படங்களின் வசூலை விட அதிகம் வருவது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் சாமானியர்கள் திரைப்படம் பார்ப்பதற்கு தொலைக்காட்சி ஒன்றை மட்டுமே நம்பியுள்ளனர் 
 
இந்த நிலையில் கடந்த வாரம் விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடித்தவன், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட சில திரைப்படங்கள் ஒளிபரப்பானது. இவற்றின் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை 1.22 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இரண்டாவது இடத்தை பெற்றுள்ள தர்பார் திரைப்படத்தை 90.90 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல், நான்காவது இடத்தில் யாரடி நீ மோகினி சீரியல், ஐந்தாவது இடத்தில் கல்யாண வீடு சீரியல், ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டை பதிவு செய்து வரும் நிறுவனம் ஒன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்