ஐபிஎல்-2020; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி !

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (23:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கி உள்ளது.இன்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 


இந்த நிலையில் இன்று குவாலிபயர் 1 போட்டியில் இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின.

முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது.   இதில் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில் மும்பை அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  143 ரன்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தது.

எனவே மும்பை அணி 57  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்