நடிகர் விஜய்யின் விஜய்67 பட முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (22:09 IST)
நடிகர் விஜய்யின் விஜய்67 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வம்சி இயக்கத்தில், வாரிசு என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தைவிட விஜய் –லோகேஷ் இணையவுள்ள விஜய்67 என்ற படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகிறது. தலைவா படத்திற்குப் பின், விஜய் இப்படத்தில் ஒரு மும்பை கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாகவும், முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாவதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்