தமிழ் சினிமாவில் தற்போது நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படமும் வெற்றி பெற்றது.
அந்தப் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு, அவர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றைத்தாண்டி ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம்.
இந்த நிலையில், நாட்டில் பிரபலமான நடிகர்கள் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பை ஆர்.மேக்ஸ் மீடியா நிறுவனம் நடத்தியது. இதில், நடிகர் விஜய் முதலிடத்தையும் நடிகர் அஜித்குமார்2 வது இடத்தையும், சூர்யா 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.