லேட் ஆக்கும் இயக்குனர் வம்சி… அப்செட் ஆன விஜய்

புதன், 28 செப்டம்பர் 2022 (08:44 IST)
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை விட இப்போது கூடுதலாக தேதிகள் கேட்டுள்ளாராம் வம்சி. அதனால் வம்சி மீது விஜய் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்