இப்படத்தில், கேமியோ ரோலில்னடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நேற்று அட்லி பிறந்த நாள் நிகழ்வில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவரும் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து, தன் டுவிட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ள அட்லி, என் பிறந்த நாளில் நான் வேறென்ன கேட்கப் போகிறேன். என் சிறந்த தூண்களான ஷாருக்கான், என்னோட அண்ணா என் தளபதி இருவரும் இருக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் விஜய் டக் இன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.