இளையராஜா பயோபிக் ஷூட்டிங் மீண்டும் தாமதமா?

vinoth
வியாழன், 10 அக்டோபர் 2024 (09:59 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிக்கிறது . இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதற்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவோடு நெருக்கமாகப் பழகியவர்கள், அவரின் நண்பர்கள் மற்றும் அவரின் சொந்த ஊர் மனிதர்கள் ஆகியோரை சந்தித்து தகவல்களைத் திரட்டினார். இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படத்தின் திரைக்கதையை எஸ் ராமகிருஷ்ணன் எழுதி வருகிறார்.

இந்நிலையில் இந்த படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு தொடங்க இருந்த ஷூட்டிங் தனுஷின் அடுத்தடுத்த படங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லபடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்