என் காலடியின் கீழ் உலகம் இருப்பதாக நினைத்தேன் : மனீசா கொய்ராலா

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (17:18 IST)
டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா... என்ற பாட்டை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் நடித்த மனிஷா கொய்ராலா என்ற நடிகையும் சேர்த்துதான்.
தொடர்ச்சியாக பல ஹிட்டுகள் கொடுத்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் மனிஷா . சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
கேன்சர் நன்கு குணமடைந்ததை அடுத்து இந்தியா திரும்பிய அவர் மறுபடியும் படங்களில் நடித்து வருகிறார்.
 
தான் புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்து HEALED என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் பல விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார். 
 
அதில் முக்கியமாக அவர் கூறியுள்ளதாவது:
 
என்  காலடிக்கு கீழே உலகம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் இடைவிடாத படப்பிடிப்புகளால் 90 களின் இறுதியில் உடல் மற்றும் உள்ளம் பல்வீனமானது என எழுதியுள்ளார். மேலும் அப்போது சில தவறான முடிவுகள் எடுத்ததாகவும் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்