அந்தவகையில் நேற்று ஒரு குட்டி பையனின் வீடியோ சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வைரலாகியது. அதில் ஒருவர் அந்த ஒரு குட்டி பையனிடம் , இளைஞர் அணி சங்கத்தில் நீ சேர்ந்துட்ட அதனால 2000 ரூபாய் உங்க அம்மாவிடம் வாங்கிட்டு வா என்று சொல்கிறார் . அதற்கு நான் சாப்பிடு வாரேன் சாப்பாடுதான் முக்கியம் எனக்கு பசிக்கும்ல என அழுதபடியே அந்த சிறுவன் கூறியது பார்ப்போரை ரசிக்கவைத்தது.
இதற்கு முன்பு கூட ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை அடித்த போது அந்த குட்டி குழந்தை அம்மாவிடம் அடிக்க கூடாது , அடிக்காம வாயால குணமா சொல்லணும் என்று அம்மாக்கு அறிவுரை கூறிய வீடியோ வைரலாகி அனைவரையும் கவர்ந்தது.