ஹரி இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குனர்: ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (09:23 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பதும் இவர் சமீபத்தில் அருண் விஜய் நடித்த யானை என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் நாயகனாக விஷால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களில் ஹரி மற்றும் விஷால் இணைந்து பணியாற்றிய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் நாயகி உட்பட படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் ஹரி - விஷால் இணைந்துள்ளது மட்டுமின்றி இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்