ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்து ஆர் கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியின் முன்னாள் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கன் நான்சி ஹன்சிகா மற்றும் அவரின் தாயார் மேல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் “ஹன்சிகா மற்றும் எனது மாமியார், என் கணவரிடம் அழுத்தம் கொடுத்து எங்கள் மணவாழ்க்கையில் குறுக்கிட்டனர். இதனால் பிரசாந்த், என் மீது வன்முறையை செலுத்தினர். என்னைக் கொடுமைப்படுத்தி பணம் மற்றும் சொத்துகளை என் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவரும்படி வற்புறுத்தினர்” எனக் கூறியுள்ளார்.