அருண்விஜய் 33 படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (18:09 IST)
அருண் விஜய்யின் 33வது படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் மேலும் முக்கிய கேரக்டர்களில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் நடிக்க உள்ளார் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஹரியின் 16வது படமும் அருண் விஜய்யும் 33வது படமுமான இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதும் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்