கோலிவுட் இயக்குனர்களின் ஆடியன்ஸ் பல்ஸ் அறிவைக் கண்டுபிடிக்க பாலிவுட் இயக்குனர்களுக்கு பல ஆண்டுகள் ஆகும்- ஞானவேல் ராஜா!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (18:57 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் அளித்துள்ள சமீபத்தைய பேட்டி ஒன்றில் “பாலிவுட் இயக்குனர்களுக்கு ஆக்‌ஷன் படத்துக்கான பல்ஸ் தெரியவில்லை. அது தென்னிந்திய இயக்குனர்களுக்கு இருக்கும் அளவுக்கு இல்லை. அதனால்தான் தென்னிந்திய இயக்குனர்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதை அவர்கள் கண்டுபிடித்து தங்கள் படங்களில் செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும்” எனக் கூறியுள்ளார். ஞானவேல் ராஜா விரைவில் பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்