ரி ரிலீஸில் புதிய பென்ச் மார்க் படைத்த விஜய்யின் கில்லி… இத்தனை கோடி வசூலா?

vinoth
சனி, 4 மே 2024 (07:15 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு முதல் வாரத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இரண்டு வாரங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் அதிகாரப்பூர்வமாக கில்லி ரி ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய பென்ச் மார்க்கை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை ரி ரிலீஸ் செய்யப்பட்ட இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை கில்லி படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்