வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா கதாபாத்திரம் சூர்யாவின் கற்பனையா? இயக்குனர் கௌதம் மேனன் பதில்!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (07:03 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.

அதன் பிறகு சில முறை ரி ரிலீஸ் செய்யப்பட்ட போதும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ரசிக்கும் தற்போதைய ரசிகர்கள் படத்தில் சூர்யாவின் முதல் காதலியாக வரும் மேக்னாவின் கதாபாத்திரம் சூர்யாவின் கற்பனை என்று ஒரு கருத்தை சொல்லி வருகின்றனர்.

அதுபற்றிய கேள்விக்கு இயக்குனர் கௌதம் மேனனே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “மேக்னா கதாபாத்திரம் நிஜமானதுதான். அது மாயை இல்லை. ஆனால் ரசிகர்களின் இப்படியான தியரியும் அழகாகதான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்