வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எல்லாம் சும்மா… அடுத்து கௌதம் மேனன் இயக்கும் படம் இதுதான்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:50 IST)
இயக்குனர் கௌதம் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.  திரையரங்கில் பெரிய வெற்றி பெறாத இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழுவினர் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்கும் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்