இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

vinoth

வெள்ளி, 18 ஜூலை 2025 (10:12 IST)
இரசிகர்கள் வாரா வாரம் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் என்னென்ன படங்கள் ரிலீசாகின்றன என்று பார்ப்பதை போலவே தற்போது வெள்ளிக் கிழமை ஆனதும் ஓடிடியில் என்ன படங்கள் ரிலீஸாகின்றன என்றும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் இந்த வாரம் (இன்று) நான்கு முக்கியத் தமிழ் படங்கள் ஓடிடிகளில் ரிலீசாகின்றன. தனுஷின் குபேரா அமேசான் ப்ரைம் தளத்திலும், சூரியின் ‘மாமன்’ ஜி 5 தளத்திலும், புதுமுகங்கள் நடித்த ‘மனிதர்கள்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய தளங்களிலும் ரிலீஸாகின்றன.

சண்முக பாண்டியனின் படை தலைவன் திரைப்படம் இந்தியா தவிர்த்த பிற நாடுகளில் ‘டெண்ட் கொட்டா’ தளத்திலும் ரிலீஸாகவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்