கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சூர்யாவின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி சூர்யாவின் க்ளோஸ் அப் புகைப்படத்தை வெளியிட்டு “சீக்கிரம் பரிமாறப்படும்” எனக் கூற அந்த பதிவைப் பகிர்ந்த சூர்யா “காத்திருக்கேன் இயக்குனரே” என பதிவிட்டுள்ளார்.