வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு சம்பளத்தை ஏற்றிய சிம்பு

புதன், 28 செப்டம்பர் 2022 (15:00 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும் படக்குழுவினர் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிவருகின்றனர். அதற்குக் காரணம் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் மூலம் நல்ல தொகையை லாபமாக தயாரிப்பாளர் பார்த்ததுதான் என்று சொல்கின்றனர்.

இந்நிலையில் இப்போது சிம்பு தன்னுடைய சம்பளத்தை ஏற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது அவர் 35 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்