இயக்குனராக பல கோடி நஷ்டம்… நடிகராக ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (16:55 IST)
இயக்குனர் மற்றும் கௌதம் மேனன் சமீபகாலமாக அதிகளவு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். ஆனால் வரிசையாக அவர் தயாரித்து இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததால் பல கோடி ரூபாய் கடனுக்கு ஆளானததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் நரகாசூரன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன.

இதையடுத்து அவருக்கு இப்போது நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பொருளாதார சூழல்களை சமாளிக்க அவரும் வரும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். எந்த வேடத்தையும் வேண்டாம் என்றே சொல்வதில்லையாம். ஆனால் நடிப்பதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் என்று சொல்லி தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்