யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை-நடிகர் அஷ்வின்

புதன், 8 டிசம்பர் 2021 (17:46 IST)
தமிழில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் ஆனவர்  அஷ்வின்.
 
இவர் தற்போது  என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு விவேக் , மெர்வின் இணைத்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வைரலானது.
 
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அஸ்வின் , தான் இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கிவிட்டதாக பேசிய வீடியோ இணையதளத்தில் பேசு பொருளானது.
 
இதுகுறித்து நடிகர் அஷ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதிலும் நான் மேடையில் திமுக பேசவில்லை.எனக்கு  நாற்பது கதைகள் வந்தது. குத்துமதிப்பாக சொன்னதை திமிராக  கூறியதுபோல் எடுத்துக்கொண்டார்கள் எனது தெரிவித்துள்ளார். அதை நானா எதார்த்தமாக சொன்னது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அதில் இல்லை என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்