தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார். அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
நடிகர் அரவிந்த் சுவாமி மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் படம் முடிந்த பின்னரே மொத்த சம்பளத்தையும் பெற்றுக்கொள்வார். அட்வான்ஸாக பெரிய தொகை எல்லாம் வாங்குவது இல்லை. ஆனால் டப்பிங்குக்கு முன்னதாக மொத்த சம்பளத்தையும் வாங்கிக் கொண்டுதான் டப்பிங் பேசுவார். ஆனால் சதுரங்க வேட்டை 2 தயாரிப்பாளர் மனோபாலா பொருளாதாரக் காரணங்களால் சம்பள பாக்கி வைத்திருந்ததால் டப்பிங் பேசவில்லை. இதனால் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.