எப்பதான் இந்த பெயிண்ட் அடிக்கிறத விடுவாரோ..! கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கில் ‘ஜருகண்டி’ ரிலீஸ்!

Prasanth Karthick
புதன், 27 மார்ச் 2024 (10:48 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகியுள்ளது.



தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி, கோலிவுட் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தி நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என தென்னிந்திய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு பேன் இந்தியா படமாக தயாராகி வருகிறது கேம் சேஞ்சர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இன்று ராம்சரண் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியாகியுள்ளது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.

ALSO READ: மக்கள் பணியில் இணைந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா

’ஜருகண்டி.. ஜருகண்டி’ என்ற இந்த பாடலின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தி படங்களில் மாடல் கேர்ளாக வலம் வந்த கியாரா அத்வானி, தென்னிந்திய சினிமா பாணியில் கமர்ஷியல் உடையில் போடும் ஆட்டம் ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வந்த அந்நியன் படத்தில் வரும் ‘அண்டங்காக்க கொண்டக்காரி’ பாடலை போலவே இதிலும் கலர் கலராக வீடுகள், வாகனங்கள், பாதி போட்டு மீதி முடிக்காமல் நிற்கும் ஒரு ரோடு என சங்கரின் ட்ரேட்மார்க் கலர்ஃபுல் பாடலாக அமைந்துள்ளது இந்த புதிய ஜருகண்டி பாடல்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக சமீபத்தில் சென்னை குவார்ட்டஸ் பகுதி ஒன்றில் பிரம்மாண்ட பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடந்து வந்தது வைரலானது. இந்நிலையில் இந்த பாடலும் பெயிண்ட் அடித்து கலர்புல்லாக அமைந்திருப்பதால் ஷங்கரையும், பெயிண்டையும் பிரிக்கவே முடியாது போல என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர் இணையவாசிகள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்