முதன்முறையாக மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை த்ரிஷா!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:29 IST)
நடிகை த்ரிஷா சினிமா திரையுலகில் காலடி வைத்து 17 வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக  மட்டுமே த்ரிஷா நடித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழ் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

 
முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் படம் ஹே ஜூட். இப்படத்தில் ஹீரோவாக நிவின்பாலி நடிக்கிறார். இப்படத்தில் பூஜை சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இப்படத்தின் கதை கோவாவை சுற்றியே  அமைந்துள்ளதாம். இப்படத்தினை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்ட நிலையில், த்ரிஷா  இப்படத்தில் கிறித்துவ பெண்ணாக நடிக்கிறாராம்.
அடுத்த கட்டுரையில்