ரஜினியை ‘தலைவா’ என்று அழைத்த பிரதமர்

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (09:40 IST)
மலேசிய பிரதமர், ரஜினியை ‘தலைவா’ என்று குறிப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா இன்று மலேசியாவில்  நடைபெறுகிறது. மாலை கலை நிகழ்ச்சிகளும், அதற்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும்  நடைபெறுகின்றன.
 
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர் -  நடிகைகள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். மலேசியாவில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
அதுவும் ஏகப்பட்ட மலேசிய ரசிகர்களைப் பெற்றிருக்கும் ரஜினிக்கு, தடபுடல் வரவேற்பு கிடைத்தது. மலேசியப் பிரதமரான மோத் நஜிப்பை, ரஜினி சந்தித்துள்ளார். ‘ இன்று மறுபடியும் தலைவா ரஜினியுடன் இன்று அருமையான சந்திப்பு, இந்தமுறை  மலேசியாவில். உங்கள் நேரத்தை இங்கு மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மலேசியப் பிரதமர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்