சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள நேற்று மலேசியா சென்றார். அவருக்கு மலேசிய அரசும், மலேசிய திரையுலகமும் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்தது
இதற்கு முன்னர் 'காலா' படப்பிடிப்பின்போது மலேசியா சென்றிருந்த ரஜினிகாந்த், மலேசிய பிரதமரை சந்தித்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த மலேசிய பிரதமர் சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு வருகை தந்தார். எனவே இன்றைய மலேசிய பிரதமர் - ரஜினி சந்திப்பு மூன்றாவது முறையாக நடந்த சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.