சென்னையின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், கடந்த சில வருடங்களாக தன்னுடைய கடை விளம்பரத்தில் ஹன்சிகா உள்பட முன்னணி நடிகைகளுடன் நடித்து வருகிறார். விரைவில் இவர் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவின
இந்த நிலையில் இன்று இரவு மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவின் ஒரு பகுதியான நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியும், சரவணா ஸ்டோர் சரவணன் ஆகிய இருவரும் கோப்பையை அறிமுகம் செய்தனர்.