வேறு எந்த நடிகர் அரசியலுக்கு வரும்போதும் அரசியல் கட்சிகளும் சரி, கோலிவுட் திரையுலகினர்களும் சரி பெரிய எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கமல், ரஜினிக்கு மட்டும் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிக்கு கோலிவுட் திரையுலகிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது
ரஜினிகாந்த் விரும்பி அரசியலுக்கு வரவில்லை என்றும், பாஜக ரஜினியை பயமுறுத்தி அரசியலுக்கு வரவழைத்துவிட்டார்கள் என்றும் கூறிய அமீர், ஆன்மீக அரசியல் என்றால் மத, இன, பேதமற்ற அரசியல் என்று கூறிவிட்டு அடுத்த நாளே அவர் ஏன் ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
அதிமுகவை வைத்து தமிழகத்தில் காலூன்றலாம் என்று நினைத்த பாஜக, அதிமுகவின் நிலைமை மோசமாக இருப்பதை அறிந்ததும், தற்போது ரஜினி மூலம் காலூன்ற முயற்சி செய்வதாகவும், இதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க கூடாது என்றும் அமீர் கூறினார்.