பிரபல தயாரிப்பாளர் அச்சானி ரவி. காலமானார்....

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (15:00 IST)
மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே.ரவீந்திர நாதன்   நாயர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

மலையாள சினிமவின் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் அச்சானி ரவி. இவர்  கடந்த 70 களில் ஜெனரல் பிக்சர்ஸ் என்ற பெயரில் மலையாள சினிமா படங்களை தயாரிக்கத் தொடங்கினார்.

மலையான சினிமாவில் தயாரிப்பாளராகவும்,  சிறந்த தொழிலதிபராகவும் இருந்த அச்சானி  100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருந்தார். கடந்த ஜூலை 8 ஆம் தேதி கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் அவர் காலமானார். அவருக்கு வயது 90.

இவரது மனனைவி பிரபல பாடகர்  உஷா ராணி, கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். இத்தம்பதியர்க்கு பிரதாப் நாயர், பிரகாஷ்   நாயுர் மற்றும் ப்ரீதா நாயர் என்ற மகள் உள்ளனர்.

அச்சானி ரவி என்றழைக்கப்பட்ட தயாரிப்பாளர் கே.ரவீந்திர நாதன்   நாயர் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்