சர்ச்சைகளைக் கிளப்பிய பேமிலி மேன் சீரிஸின் அடுத்த பாகம் அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:44 IST)
பேமிலி மேன் சீசன் 2 தமிழக மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதில் அதிகமாக தமிழ் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த சீரிஸின் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸையும் அமேசான் மூலமாக ராஜ் & டி கே இருவரும் தயாரித்து உருவாக்குகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்