பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

vinoth

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:55 IST)
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ இம்மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதை அவர் இப்போது ‘குட் பேட் அக்லி’ படத்திலும் செய்யத் தவறவில்லை. ஏனென்றால் நேற்று வெளியான டிரைலரிலேயே அஜித்தின் அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை நினைவூட்டும் வசனம் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும், அஜித் ரசிகர் அல்லாதவர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இந்த டிரைலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. வெளியான 24 மணிநேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை இந்த படம் இணையத்தில் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆதிக்கின் நகாசு வேலைகள் ரசிகர்களை திருப்தி செய்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்