ரஜினி படத்துக்காக இதுவரை வாங்காத சம்பளத்தைப் பெறும் பஹத் பாசில்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:10 IST)
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பஹத் பாசில், மஞ்சு வாரியர், நானி, ஷர்வானந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக பஹத் பாசிலுக்கு இதுவரை அவர் வாங்காத சம்பளமாக 8 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கவே அவருக்கு 5 கோடி ரூபாய்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்