கிரிஞ்ச் படத்தால் பறிபோன வாய்ப்புகள்… கன்னட சினிமாவுக்கு செல்லும் இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
இயக்குனர் லஷ்மன் ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து வெளியான பூமி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் வாட்ஸாப் பார்வேடு மெஸேஜ்களை வைத்து உருவாக்கப்பட்டதாக பயங்கர கிண்டல்களையும், விமர்சனங்களையும் சந்தித்தது. அதிலும் குறிப்பாக இயக்குனர் லஷ்மன் ரசிகர்களால் வைத்து செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த இயக்குனர் லஷ்மனோடு அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆனார். ஆனால் பூமி படத்தின் தோல்வியால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் சில ஆண்டுகளாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத லஷ்மன் இப்போது கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்  குமாரசாமியின் மகன் நிகில் அறிமுகமாகும் படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்