துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

vinoth
திங்கள், 23 டிசம்பர் 2024 (13:06 IST)
சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. அவர் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து துல்கரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. இதையடுத்து  துல்கர் அடுத்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்