முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

vinoth
திங்கள், 23 டிசம்பர் 2024 (12:57 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் வெளியானது.

படம் வெளியானது முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் ஒரே குறையாக படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் அரசியல் சித்தாங்களையோ பொன்மொழிகளையோ உதிர்த்துக் கொண்டே செல்கிறது. அந்த வசனங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு வசனங்களாக இருந்தாலும் சினிமாவில் அதைக் காட்சியாகதானே வைக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்பட்டது.

அதையடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் பெரிதாக ஏறவில்லை என தெரிகிறது. முதல் மூன்று நாட்களில் உலகளவில் இந்த படம் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வார நாட்களில் இந்த படம் செய்யும் வசூலைப் பொறுத்துதான் ஒட்டுமொத்தமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கும் என்பது தெரியவரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்