தொடர் தோல்வியால் சினிமாவில் நான் சறுக்கி விழுந்தேன்- எஸ்.ஜே.சூர்யா

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (13:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர், வாலி, குஷி, வியாபாரி, இசை உள்ளிட்ட பல படங்களில் இயக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், மெர்சல், மாநாடு உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இவருக்கு ஜோடியாக பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசும்போது, ''ஜீனியர் ஆர்டிஸ்டாக என் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன். பின், இயக்குனராகி சம்பாதித்தேன். அதில் இருந்து தயாரிப்பாளர் ஆகி அன்பே ஆருயிரே,   நியூ போன்ற படங்கள் எடுத்தே. அடுத்தடுத்து படங்கள் எடுத்து, சினிமாவில் சறுக்கி விழுந்தேன்.

அதன்பின்னர், இசை படம் எடுத்து எழுந்து உட்கார்ந்து,  தொடர்ந்து  படங்களில் நடித்து வருகிறேன் ''என்று கூறினார். மேலும், '' இப்படம் நன்றாக வந்துள்ளது. பிரியா பவானி சங்கர் பொம்மை போன்றே நடித்துள்ளார் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காக படம் பார்க்கலாம் ''என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்