இந்நிலையில் இப்போது மோகன் ஜி தன்னுடைய அடுத்த படமாக தன்னுடைய ஹிட் படமான திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்டே கதாநாயகனாக நடிக்கிறார். இரண்டாம் பாகத்தின் கதைக்களம் வரலாற்றுக் காலகட்டமாக உருவாவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது.