தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் இருந்தார்…. ட்யூட் விழாவில் பெரியார் பற்றிப் பேசிய கீர்த்தீஸ்வரன்!

vinoth

வியாழன், 23 அக்டோபர் 2025 (08:28 IST)
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.

இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான ‘ட்யூட்’ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஐந்து நாளில் 96 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய இயக்குனர் கீர்த்தீஸ்வரன் “இந்த படத்தில் நாங்கள் புதிதாக சொல்லியுள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் நிறையப் பெரியவர்கள் இருந்துள்ளார்கள். ஒரு பெரியவரும் இருந்தார், அவர் நிறைய சொல்லியுள்ளார். அந்த பெரியவர்கள் சொன்ன வழியில் வந்துதான் நாங்கள் இதை சொல்லியுள்ளோம். புதிதாக எதையும் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்