இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. அதில் வெற்றிமாறன், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீதேவி, அனிஷ்மா, மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க பள்ளியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு காதலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் மோஷன் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல இந்த படம் பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை மோஷன் போஸ்டர் காட்டியுள்ளது.