தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. அதன் பின்னர் இந்த படத்தின் மீது ட்ரோல்கள் அதிகமாகி நெட்டிசன்கள் வைத்து செய்தனர்.
குறிப்பாக இந்த படத்தில் அமீர்கான் நடித்திருந்தா தாஹா கதாபாத்திரம் வட இந்திய ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்துக்குக் கதையில் எந்த தேவையும் இல்லை, வெறுமனே வணிக நோக்கத்துக்காக மட்டுமே வைக்கபட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அமீர்கானின் வட இந்திய ரசிகர்கள் ஏன் இந்த படத்தில் அவர் நடித்தார் என்றெல்லாம் புலம்பினார்கள். இந்நிலையில் கூலி படத்தில் தன்னுடையக் கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை. அதை நான் ரஜினி சார் மேல் கொண்ட அன்புக்காக மட்டுமே நடித்தேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆமீர்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷால் இப்போது அது பற்றி பேசியுள்ளார். அதில் “கூலி படத்தைப் பற்றி ஆமீர்கான் சார் எங்குமே தவறாகப் பேசவில்லை. அது பற்றி அவர் பத்திரிக்கை செய்தி வழியாகவே விளக்கமளித்துள்ளார். இந்த படம் பற்றி பேசும்போது ரஜினி சார் மேலிருந்த அன்பிற்காக மட்டுமே நடித்தேன் என என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.