இந்த போஸ்டரை கண்ட சூர்யாவின் ரசிகர் ஒருவர், "யாருய்யா ராஜமௌலி? தமிழ் சினிமாவின் முதல் ₹1000 கோடி திரைப்படம் வருது," என்று கிண்டல் செய்யும் தொனியில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மோகன். ஜி, சூர்யாவை குறிவைத்து, "தியேட்டர்ல ஒரு ஹிட் கொடுங்கடா முதல்ல... அப்பறம் என்னைக் கிண்டல் பண்ணலாம்... வெளியீட்டுத் தேதி சொல்லுங்கடா முதல்ல..." என்று காட்டமாக விமர்சித்தார்.
சமீபகாலமாக சூர்யாவின் சில படங்கள் திரையரங்குகளை தவிர்த்து நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியானதும், திரையரங்குகளில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததும் மோகன். ஜி-யின் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கலாம்.