பொழுது விடிஞ்சா பாருவை சமாளிக்கிறதே பெரிய டாஸ்க்கா இருக்கே! திணறும் ஹவுஸ்மேட்ஸ்! - Biggboss season 9

Prasanth K

வியாழன், 23 அக்டோபர் 2025 (09:51 IST)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9-ல் தினசரி டாஸ்க் செய்வதை விட விஜே பாருவுடன் சண்டை போடுவதே ஹவுஸ்மேட்ஸின் தினசரி வேலையாக மாறி வருகிறது.

 

பிக்பாஸ் சீசன் 9 மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ஒருவர் தானாக வெளியேற, 2 எலிமினேஷன்களுக்கு பிறகும் போட்டி சுவாரஸ்யமடையாமல் நகர்ந்து வருகிறது. வாரா வாரம் பிக்பாஸ் சில டாஸ்க்குகள், போட்டிகள் வைத்தாலும் அவற்றை சுவாரஸ்யமானதாக மாற்ற ஹவுஸ்மேட்ஸ் திணறும் நிலை தொடர்கிறது.

 

முக்கியமாக விஜே பாரு, ஹவுஸ்மேட்ஸுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறார். எல்லாரும் சேர்ந்து போட்டிகளை எப்படி ஸ்போர்ட்டிவாக சுவாரஸ்யமாக கொண்டு செல்வது என ஒரு திட்டமிட்டால் பாரு அதற்கு எதிர்திசையில் செயல்பட்டு கடைசியில் குழாயடி சண்டையில் கொண்டு நிறுத்தி விடுகிறார்.

 

நேற்றைய ஜூஸ் டாஸ்க்கின்போது குவாலிட்டி செக்கர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அதை பயன்படுத்தி பாரு செய்தவை சிரிக்க வைப்பதை விட வெறுப்பேற்றவே செய்தது. முக்கியமாக வாட்டர்மெலன் திவாகரை முடிவுகள் எடுக்க விடாமல் தனது கேமிற்கு ஏற்றவாறு அவர் செயல்பட வேண்டும் என அவரை டார்ச்சர் செய்து வருகிறார்.

 

இன்றைய ப்ரோமோவில் காலையில் மைக்கில் பேட்டரி மாற்ற சொல்லி பாருவிடம் பிக்பாஸ் சொல்ல, அதை வீட்டு தலயான கனி அக்கா கேள்வி கேட்க, அதற்கு பாரு மீண்டும் வாக்குவாதம் செய்ய பிரச்சினை பூதாகரமானது. இதில் கம்ருதீனும், கானா வினோத்தும் பாருவுக்கு ஆதரவாக வந்துவிட மறுபக்கம் எஃப்ஜே மற்றும் அன்பு கேங் சேர்ந்துவிட மீண்டும் வாக்குவாதத்திலேயே முடிந்துள்ளது. வாக்குவாதங்களை தவிர்த்து  போட்டி எப்போது சுவாரஸ்யமாகும் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கே வந்துவிட்டது.

 

Edit by Prasanth.K

#Day18 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/RNNUuUKznW

— Vijay Television (@vijaytelevision) October 23, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்